1ம் ஆண்டு நினைவஞ்சலி

15 Aug 2011

photo
பெயர்:அமரர் பூபாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
பிறந்த இடம்:முள்ளியவளை
வாழ்ந்த இடம்:சுவிஸ் Basel
மறைவு :15 ஓகஸ்ட் 2010

முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பூபாலசிங்கம் ஜெகதீஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
இன்று வானுலகில் தெய்வமாகிவிட்ட
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே!
எம்மையெல்லாம் தவிக்கவிட்டு எங்கு சென்றீர்கள்!

ஆண்டு ஒன்று கடந்ததப்பா
ஆலமரம் வீழ்ந்ததப்பா
நீங்கள் எம்முடன் இல்லை
நாங்கள் உங்களைத் தேடுகின்றோம்

தேசமோ உங்களைத் தேடி உருகுதப்பா
தேடி விடமுடியாமல் வாடுகின்றோம்
வாடுகின்றோம் உங்களை எண்ணி
வார்த்தை இல்லை அழைப்பதற்கு

வந்திடுங்கள் எம்மிடத்தில்
உங்கள் வரவை நாம் தேடுகின்றோம்
உங்கள் மழலைகளின் உள்ளங்கள் பூரிக்க 
வந்திடுங்கள் எம்மிடத்தில்

எம்முடன் வாழ்ந்தகாலம்
மனதினிலே பதியுதப்பா
உங்களை எண்ணி நாங்களெல்லாம்
துடியாய் துடித்து வாடுகின்றோம்

ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்கள் நினைவு எம்மை விட்டு
என்றும் அகலாது!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் பிரார்த்திக்கும் உங்கள் 
அன்பு மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்!
ஒம் சாந்தி! ஒம் சாந்தி!

தகவல்
மனவைி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:00
41614114723

Ads
Latest Videos