அறிமுகமற்ற ஆண்களை கண்டவுடன் அவர்கள் மீது திடீரென தாவும் பெண் !

[ ]

26 Jan 2012

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் அறிமுகமற்ற ஆண்கள் மீது திடீரென தாவிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.


லொஸ் ஏங்சல்ஸை சேர்ந்த லில்லி மெக் டிபோன் எல்ரோய் எனும் 32 வயதான பெண்ணே இவ்வாறான விசித்திர செயற்பாட்டில் ஈடுப்பட்டு வருகின்றார். இதனை ஒரு கலையாக தான் அவர் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். 


இவ்வாறு ஆண்கள் மீது தாவும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த திட்டமானது ஓர் வலுவான பெண்ணியக்கச் செயற்பாடாக உள்ளதென்றும் இதனூடாக மனித இணைப்புப் பற்றி பேசுவதற்கு தனக்கு அதிக ஆர்வமுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அவர் தனது இணையத்தளத்தில் இது தொடர்பாக கூறுகையில்

இத்திட்டத்திற்காக நான் பல மதுபான விடுதிகளுக்கு சென்று அங்கு அறிமுகமற்ற ஆண்களை கண்டவுடன் அவர்கள் மீது திடீரென தாவிக்கொள்வேன்.  என்னைக் பிடித்துக் கொள்வதற்கு காத்திருக்கும் திடமான மற்றும் பலவீனமான ஆண்கள் மீது நான் தாவுவேன் என்று தெரிவித்துள்ளார்.

Ads
Latest Videos