ஈராக்கில் கார் வெடிகுண்டு வெடித்தது நான்கு பெண்கள் உட்பட 28 பேர் பலி

27 Jan 2012

ஈராக்கில் இறுதி ஊர்வலத்தின் போது கார் வெடிகுண்டு வெடித்ததில் நான்கு பெண்கள் உட்பட 28 பேர் பலியாகினர் 50 பேர் காயமடைந்தனர்.


ஈராக் தலைநகர் பாக்தாத் நகரின் கிழக்குப் பகுதியில் கடந்த 23ம் தேதி ரியல் எஸ்டேட் அதிபர் முகமது அல் மாலிக் உட்பட அவரது குடும்பத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்களின் இறுதி ஊர்வலம் நேற்று நடந்தது. அப்போது காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் திடீரென வெடித்தன. இதில் ஊர்வலத்தில் இருந்த நான்கு பெண்கள் உட்பட 28 பேர் பலியாகினர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இறுதி ஊர்வலத்தில், சவப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பிணங்கள், சின்னாபின்னமாகி சிதறின.

அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க, ராணுவ ஹெலிகாப்டர்கள் வானில் கண்காணிப்பில் இருந்த போது இச்சம்பவம் நடந்தது. ஈராக்கில் உள்ள ஷியா முஸ்லிம்களைக் கொல்வோம் என அல்-குவைதா பயங்கரவாதிகள் ஏற்கனவே அறிவித்து சதித் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீப காலத்தில் ஈராக்கில் நடந்த மிகப் பெரிய தாக்குதல் சம்பவமாக இது கருதப்படுகிறது.

Ads
Latest Videos