ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் :பைனலுக்கு முன்னேறினார் ஜோகோவிச்
27 Jan 2012
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு முன்னேறினார் உலகின் நம்பர்-1 வீரரான செர்பியாவின் ஜோகோவிச்.

மெல்போர்னில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில் நடப்பு சாம்பியன்' ஜோகோவிச் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவை எதிர்கொண்டார்.
இதில் 3-6, 6-7, முதல் இரண்டு செட்டை இழந்த ஜோகோவிச், பின் எழுச்சி பெற்றார். 4 மணி நேரம், 50 நிமிடங்கள் நீடித்த இப்போராட்டத்தில் ஜோகோவிச், 6-3, 3-6, 6-7, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். நாளை நடக்கும் பைனலில் ஜோகோவிச், நடால்(ஸ்பெயின்) மோதுகின்றனர்.

பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் சுவனரேவா, கஸ்னட்சோவா ஜோடி, இத்தாலியின் சாரா எரானி, ராபர்டா வின்சி ஜோடியை எதிர்கொண்டது. இதில் சுவனரேவா ஜோடி, 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று "சாம்பியன் பட்டம்' வென்றது. இது ஆஸ்திரேலிய ஓபனில் இந்த ஜோடி வெல்லும் முதல் பட்டம்.
கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, பூபதி ஜோடி, அமெரிக்காவின் சேன்ட்ஸ், ருமேனியாவின் டிகாயு ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 3-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்விஅடைந்தது.
கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் பயஸ், ரஷ்யாவின் வெஸ்னினா ஜோடி இத்தாலியின் வின்சி, டேனியல் ஜோடியை 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வென்று, பைனலுக்குள் நுழைந்தது.