ஐநா சபைக்கு வந்த 99 கோடி ரூபாய் மதிப்புள்ள 16 கிலோ போதைப்பொருள்
[
]
28 Jan 2012

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு கடந்த வாரம் ஒரு பார்சல் வந்தது. அதில் 16 கிலோ போதைப்பொருள் இருந்தது. அதை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஐநா சபை செய்தித் தொடர்பாளர் பால் பிரவுன் கூறுகையில்
மெக்சிகோவிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு பார்சல் வந்தது. அதில் அனுப்பியவர்களின் பெயரோ முகவரியோ இல்லை. தவறுதலாக இந்த பார்சல் வந்திருக்கலாம் என்றார்.
அந்த பார்சல் மீது சரியாக தெரியாத வகையில் ஐநா லோகோ பொறிக்கப்பட்டிருந்ததாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஐநா அலுவலக பார்சல் போல கடத்துவதற்காக திட்டமிட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.