இங்கிலாந்து அணி 327 ஓட்டங்கள்: பாகிஸ்தான் தடுமாற்றம்
27 Jan 2012
பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 327 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

அபுதாபியில் நடைபெறும் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 257 ஓட்டங்களை மாத்திரமே பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியின் சார்பில் அலிஸ்டயர் குக் 94 ஓட்டங்களையும் ஜொனதன் ட்ரொட் 74 ஓட்டங்களையும் ஸ்டுவர்ட் புரோட் 58 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் சயீட் அஜ்மல் 108 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொஹமட் ஹாபிஸ் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் 3 ஆவது நாளான இன்று பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. இரண்டாவது இன்னிங்ஸிலும் அவ்வணியின் முன்வரிசை வீரர்கள் பிரகாசிக்கத் தவறினர் . இன்றைய ஆட்டமுடிவின்போது அவ்வணி 4 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அஸார் அலி 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழ்ககாமல் உள்ளார். இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் மொன்டி பனேஸர் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பாகிஸ்தான் அணி தற்போது 55 ஓட்டங்களால் மாத்திரம் முன்னிலையில் உள்ளது.