தினமும் 200 மில்லி பால் கொடுக்கும் அதிசய கன்று குட்டி
15 Apr 2012
ஆந்திர மாநிலம் மகபூர் நகர் மாவட்டம் மசீர்மாவிடு பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரய்யா (விவசாயி). இவர்சித்தூர் மாவட்டத்தில் இருந்து ஒரு பசு மாட்டை ரூ.45 ஆயிரத்துக்கு வாங்கி வந்தார். கருவுற்று இருந்த பசுமாடு கடந்த 15 நாட்களுக்கு முன்பு கன்று ஈன்றது. தாய் பசுவிடம் கன்றுகுட்டி பால் குடித்துக்கொண்டு இருந்தபோது திடீர் என கன்றின் மடியில் இருந்து பால் சுரந்தது.

வியப்படைந்த ராமச்சந்திரய்யா கன்றின் மடியில் பால் கறந்தபோது 200 மில்லி பால் கிடைத்தது. தற்போது கன்று குட்டி தினமும் 200 மில்லி பால் கொடுக்கிறது. பால் சுரக்கும் அதிசய கன்று குட்டியை அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து செல்கிறார்கள்.